அனைவரையும் உள்ளடக்கிய சினிமா அனுபவத்தை 56-வது இந்தியா சர்வதேச திரைப்பட விழா கூட்டுகிறது
கோவாவில் நடைபெற்ற 56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா, சினிமாவை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, சினிடப்ஸ் என்ற பன்மொழி ஒலி ஆதரவுச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களை பார்வையாளர்கள் தாங்கள் விரும்பும் மொழியில் காண இது உதவுகிறது. பன்முகத்தன்மையை ஆதரிக்கும் திரைப்பட விழாவின் பார்வையை இந்த புதுமையான முயற்சி பிரதிபலிக்கிறது.
சினிடப்ஸ் செயலி மூலம், பார்வையாளர்கள் திரையிடப்படும் மொழியைப் பொருட்படுத்தாமல், தங்கள் விருப்பமான மொழியின் ஆடியோ டிராக்கைப் பதிவிறக்கம் செய்து, காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரையுடன் தானாக ஒத்திசைத்து, தடையில்லாத திரைப்பட அனுபவத்தைப் பெறலாம். இது மொழியியல் தடைகளை உடைத்து, சினிமா அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
சினிடப்ஸ், பன்மொழிப் பார்வையாளர்களை ஒரே காட்சிக்கு ஈர்த்து, வட்டார மற்றும் உலக சினிமாவைக் கண்டறிய உதவுகிறது. மேலும், இந்த திரைப்பட விழா சிறப்புத் திரையிடல்களில் ஒலி விளக்கம். மற்றும் வசன வரிகள் (CC) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒலி விளக்கம், பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்குக் காட்சியை அப்படியே விவரிக்கிறது. வசன வரிகள் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு உரையாடல் எழுத்துகளை வழங்குகிறது.
இந்த அம்சங்கள், மொழி மற்றும் அணுகலை தடையாக இல்லாமல் பாலங்களாக மாற்றி, திரைப்பட விழாவின் உள்ளடக்க அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194871
(செய்தி வெளியீட்டு எண் 2194871)
***
AD/VK/SH
Release ID:
2195046
| Visitor Counter:
3