தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் அதன் ஊடகப் பிரிவுகளில் சிறப்பு பிரச்சாரம் 5.0 முழு வீச்சில் நடைபெறுகிறது

Posted On: 22 OCT 2025 1:56PM by PIB Chennai

தூய்மையை நிறுவனமயமாக்குவதற்கும் நிலுவையில் உள்ள பணிகளை குறைப்பதற்குமான சிறப்பு பிரச்சாரம் 5.0  மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

நாடு முழுவதும் உள்ள அமைச்சகத்தின் ஊடகப் பிரிவுகள் மற்றும் கள அலுவலகங்கள்  சிறப்பு பிரச்சாரம் 5.0-ல் தீவிரமாகப் பங்கேற்று, பணியிடங்களை சுத்தம் செய்தல், நிலுவையில் உள்ள பணிகளை நிவர்த்தி செய்தல் மற்றும் செயல்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன. பிரச்சாரத்தின் செயல்படுத்தல் கட்டம் அக்டோபர் 2 அன்று தொடங்கியது, பிரச்சாரத்தின் ஆயத்த கட்டத்தில் இறுதி செய்யப்பட்ட இலக்குகளை அடைய அர்ப்பணிப்புடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அக்டோபர் 2, 2025 முதல் அக்டோபர் 17 வரையிலான பிரச்சாரத்தின் முதல் பதினைந்து நாட்களில் அமைச்சகம் 493 வெளிப்புற பிரச்சாரங்களை நடத்தியது. 973 இடங்களை சுத்தம் செய்துள்ளது. 104 வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

சுமார் 1.43 லட்சம் கிலோ குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக ரூ. 34.27 லட்சம் ஈட்டப்பட்டது. சுமார் 8007 சதுர அடி இடத்தில் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

சுமார் 13,900 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் 3957 நீக்கப்பட்டுள்ளன. மொத்தம் 585 மின்-கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 165 அகற்றப்பட்டுள்ளன.

சிறப்பு பிரச்சாரம் 5.0-ன் கீழ் பல்வேறு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மேற்பார்வையிட அமைச்சக அதிகாரிகள் குழு பல்வேறு கள அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த பொருளாதார ஆலோசகரும் நோடல் அதிகாரியுமான ஆர்.கே. ஜெனா, சாஸ்திரி பவனில் உள்ள பதிவு அறை மற்றும் அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளில் தூய்மை மற்றும் கோப்புகளை அகற்றும் பணிகளை ஆய்வுசெய்தார்.


மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181466  

***

SS/PKV/SH


(Release ID: 2181634) Visitor Counter : 6