ஊரக வளர்ச்சி அமைச்சகம்
நாடு முழுவதும் 2026 ஜூலை 1 முதல் வரலாற்று சிறப்புமிக்க வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி இயக்கச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது
प्रविष्टि तिथि:
11 MAY 2026 12:09PM by PIB Chennai
இந்தியாவின் ஊரக வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய அம்சமாக நாடு முழுவதும் 2026 ஜூலை 1 முதல் வரலாற்று சிறப்புமிக்க வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி இயக்கச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு 2026 மே 11 அன்று அறிவிக்கை வெளியிட்டது.
வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி இயக்கச் சட்டம் அமல்படுத்தப்படுவதைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005, அதே நாளிலிருந்து திரும்பப் பெறப்படும். இது இந்தியாவின் ஊரக மேம்பாட்டுக் கட்டமைப்பில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் குறிப்பதோடு, 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த, ஒருங்கிணைந்த, எதிர்காலத்திற்குத் தயாரான மற்றும் உற்பத்தித்திறன் சார்ந்த ஊரக மாற்றத்தின் ஒரு புதிய சகாப்தத்தையும் தொடங்கி வைக்கிறது.
இச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிதியாண்டும் ஊரகப் பகுதிகளின் வீடுகளில் வசிப்பவர்களுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு அளிப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட உத்தரவாதத் திட்டம் வாழ்வாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தி ஊரக வருவாயை மேம்படுத்தி நீடித்த கிராம நிலையிலான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது.
தொழிலாளர்களுக்கு அவருடைய தேவையின் அடிப்படையில் பணி வழங்கப்படும். வேலைவாய்ப்பு இல்லாத சூழலில் அதற்கான படியும், வழங்கப்படும். இச்சட்டம் உரிய நேரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் ஊதியங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஊதியங்கள் தொழிலாளர்களின் வங்கி அல்லது தபால் அலுவலக கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்படும். ஊதியங்கள் வாராந்தர அடிப்படையில் அல்லது வருகைப் பதிவு முடிவடைந்த 15 நாட்களுக்குள் அளிக்கப்படும்.
அவ்வாறு வழங்கத் தவறினால் சட்டவிதிமுறைகளுக்கு ஏற்ப தொழிலாளர்கள் தாமதத்திற்கான இழப்பீட்டுத் தொகையை பெறமுடியும்.
வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் மற்றும் ஊரக மேம்பாட்டு மாற்ற நடவடிக்கைகளுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில், ரூ.95,692 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய வேலைவாய்ப்புக்கான அட்டைகள் தொடர்ந்து செல்லுபடியாகும். தற்போதைய பணிகள் இடையூறின்றி தொடர்ந்து நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259703®=3&lang=1
***
SS/IR/KPG/PD
(रिलीज़ आईडी: 2259912)
आगंतुक पटल : 111
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
Nepali
,
Bengali-TR
,
Malayalam
,
Assamese
,
English
,
Khasi
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Telugu_Vw
,
Kannada