நிதி அமைச்சகம்
2025-26 நிதியாண்டில் தோராயமான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 சதவீதம் எனவும் 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதம் எனவும் மத்திய பட்ஜெட் 2026-27-ல் மதிப்பிடப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
01 FEB 2026 12:36PM by PIB Chennai
வலுவான உள்நாட்டுத் தேவை, கட்டமைப்பு சீர்திருத்தங்கள், நிலையான பருண்மைப் பொருளாதாரச் சூழல் ஆகியவை காரணமாக இந்தியாவின் வளர்ச்சிக் கண்ணோட்டம் நேர்மறையாக உள்ளது. இந்த ஆண்டில் நாடு 3 முக்கிய தரவரிசை நிறுவனங்களின் உயர்தரத்தைப் பெற்றுள்ளது. மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின் படி, தோராயமான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 சதவீதம் என்பதுடன் 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சேவைகள் துறை முதன்மை வளர்ச்சிக்கான இயக்கியாக உள்ளன. இதன் வளர்ச்சி விகிதம் 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. பொருள் உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறையின் வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது. வேளாண் துறை வளர்ச்சி 3.1 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளைக் காட்டிலும் கூடுதலாக 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தோராய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதி (வர்த்தகம் மற்றும் சேவைகள்) 2025-ம் நிதியாண்டில் 825.3 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. இந்த வேகம் 2026-லும் தொடர்கிறது. அமெரிக்காவால் அதிக வரி விதிக்கப்பட்ட போதும், 2025 ஏப்ரல் – டிசம்பர் காலத்தில் வர்த்தக ஏற்றுமதி 2.4 சதவீதமும், சேவைகள் ஏற்றுமதி 6.5 சதவீதமும் அதிகரித்தது. அதே சமயம் 2025 ஏப்ரல்- டிசம்பர் காலத்தில் வர்த்தக இறக்குமதி 5.5 சதவீதம் அதிகரித்தது. 2025-ம் நிதியாண்டில் மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடு வரவு சாதனை அளவாக 81 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2026-ம் நிதியாண்டிலும் வலுப்பெற்று எந்த நிதியாண்டைக் காட்டிலும் முதல் 7 மாதங்களில் மிக அதிகமான வரவு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2025-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதமாக இருந்த நடப்பு கணக்குப் பற்றாக்குறை 2026-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் 0.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2026-27-ம் நிதியாண்டில் மதிப்பீட்டுக்கு முந்தைய மொத்த வரி வருவாய் 44.04 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2025-26-ம் நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட இது 8 சதவீதம் அதிகமாகும். இதில், நேரடி வரிகளான 26.97 லட்சம் கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய பங்களிப்பாகும். மறைமுக வரிகள் 17.07 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் என்பது 16-வது நிதிக்குழுவின் நிதிப் பகிர்வுக்கான முதலாவது ஆண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வைத் தொடர்ந்து 41 சதவீதம் என நீட்டிக்க 16-வது நிதிக்குழுப் பரிந்துரை செய்துள்ளது.
2026-27-ம் நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த செலவு 53.47 லட்சம் கோடி ரூபாய் (உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 13.6 சதவீதம்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025-26-ம் நிதியாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீடான 49.65 லட்சம் கோடி ரூபாய் என்பதைவிட 7.7 சதவீதம் அதிகமாகும். 2026-27-ம் நிதியாண்டில் மூலதனச் செலவு 12.22 லட்சம் கோடி ரூபாய் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1 சதவீதம்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் மாநிலங்களின் மூலதனச் செலவுக்கு கடன் வழங்கும் சிறப்பு உதவிக்கான ஆதரவையும் உள்ளடக்கியதாகும். மூலதனச் சொத்துகள் உருவாக்கத்திற்கான மானிய உதவிகள் ஒதுக்கீடு 4.93 லட்சம் கோடி ரூபாய் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதம்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த மூலதனச் செலவு 2026-27-ம் நிதியாண்டில் 17.15 லட்சம் கோடி ரூபாய் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221389®=3&lang=1
**
VJ/PKV/SMB/RJ/RK/SH
(रिलीज़ आईडी: 2221732)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Kannada
,
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu