பிரதமர் அலுவலகம்
ஆசிய கோப்பை 2025ல் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் சிறப்பான வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2025 7:20AM by PIB Chennai
பீகாரின் ராஜ்கிரில் நடைபெற்ற ஆசிய கோப்பை 2025ல் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் சிறப்பான வெற்றிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். "தற்போதைய சாம்பியன்களான தென் கொரியாவை வீழ்த்தியதால், இந்த வெற்றி இன்னும் சிறப்பானது", என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டதாவது,
"பீகாரின் ராஜ்கிரில் நடைபெற்ற ஆசிய கோப்பை 2025ல் சிறப்பான வெற்றி பெற்ற நமது ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். தற்போதைய சாம்பியன்களான தென் கொரியாவை வீழ்த்தியதால், இந்த வெற்றி இன்னும் சிறப்பானது!
இந்த வெற்றி இந்திய ஹாக்கிக்கும், இந்திய விளையாட்டுக்கும் பெருமைக்குரிய தருணம். நமது வீரர்கள் தொடர்ந்து மேலும் உயரங்களை எட்டி, நாட்டிற்கு பெருமை சேர்க்கட்டும்!"
***
(Release ID: 2164536 )
SS/EA/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2164616)
வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam