தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களை பதிவு செய்வது பிரஸ் சேவா இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மேற்கொள்ளும் வசதி
Posted On:
02 MAR 2024 3:30PM by PIB Chennai
வரலாற்று சிறப்புமிக்க பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவு சட்டம், 2023 மற்றும் அதன் விதிகளை அரசிதழில் மத்திய அரசு அறிவித்துள்ளது, இதன் விளைவாக இந்த சட்டம் 2024 மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இனிமேல், பருவ இதழ்களின் பதிவு பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவு சட்டம் , 2023 மற்றும் பத்திரிகை மற்றும் பருவ இதழ்களின் பதிவு விதிகளால் நிர்வகிக்கப்படும். இந்த அறிவிப்பின்படி, இந்திய பத்திரிகை பதிவாளர் அலுவலகம் - இந்திய செய்தித்தாள்களின் முன்னாள் பதிவாளர் புதிய சட்டத்தின்படி செயல்படும்.
டிஜிட்டல் இந்தியாவின் நெறிமுறைகளுக்கு ஏற்ப, நாட்டில் உள்ள செய்தித்தாள்கள் மற்றும் இதர பருவ இதழ்களை பதிவு செய்வதற்கான இணையதள வசதியை புதிய சட்டம் வழங்குகிறது. பதிப்பாளர்களுக்கு தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தும் பல்வேறு கட்டங்களில் பல்வேறு படிகள் மற்றும் ஒப்புதல்களை உள்ளடக்கிய சிக்கலான நடைமுறைகளை புதிய முறை மாற்றியமைக்கிறது.
முன்னதாக, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், புதிய சட்டத்தின்படி விண்ணப்பங்களைப் பெறுவதற்காக தலைமை பத்திரிகை பதிவாளர் பிரஸ் சேவா இணையதளத்தை (presssewa.prgi.gov.in) தொடங்கினார்.
பருவ இதழ் ஒன்றை அச்சிடுபவருக்கு அறிவித்தல், அயல்நாட்டு இதழ் ஒன்றின் நகல் பதிப்பைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம், பருவ இதழின் பதிவுச் சான்றிதழைப் பெறுவதற்கான வெளியீட்டாளரின் விண்ணப்பம், பதிவுச் சான்றிதழைத் திருத்துவதற்கான விண்ணப்பம், பருவ இதழ்களின் உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம், பருவ இதழ் வெளியீட்டாளரின் வருடாந்திர அறிக்கையை சமர்ப்பித்தல் உள்ளிட்ட அனைத்து விண்ணப்பங்களும், ஒரு பருவ இதழின் பிரதிகள் விற்பனையை சரிபார்க்கும் நடைமுறை பிரஸ் சேவா இணையதளம் மூலம தெரிவிக்கப்படும்.
பிரஸ் சேவா இணையதளம் காகிதமில்லா நடைமுறையை செய்கிறது மற்றும் மின்னணு கையொப்ப வசதி, டிஜிட்டல் கட்டண நுழைவாயில், உடனடி பதிவிறக்கத்திற்கான க்யூஆர் குறியீடு அடிப்படையிலான டிஜிட்டல் சான்றிதழ்கள், அச்சகங்கள் மூலம் தகவலை வழங்குவதற்கான ஆன்லைன் அமைப்பு, தலைப்பு கிடைப்பதற்கான நிகழ்தகவு சதவீதம், அனைத்து வெளியீட்டாளர்களுக்கும் பதிவுத் தரவுக்கான ஆன்லைன் அணுகல், வருடாந்திர அறிக்கைகளை தாக்கல் செய்தல் போன்ற சேவைகளை வழங்குகிறது.
சாட்பாட் அடிப்படையில் தொடர்பு கொண்டு குறை தீர்க்கும் முறையை ஏற்படுத்தவும் இது விரும்புகிறது. பிரஸ் சேவா இணையதளம் (prgi.gov.in) தொடர்புடைய அனைத்து தகவல்களுடனும் பயனர்களுக்கு ஏற்ற வகையில் உள்ளது.
புதிய சட்டத்தின்படி, பருவ இதழ்களை பதிவு செய்வதற்கான அனைத்து விண்ணப்பங்களும் பிரஸ் சேவா இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி, பருவ இதழ்கள் வெளியிட விரும்பும் பதிப்பாளர்கள் அதை வெளியிடுவதற்கு முன்பு தங்கள் தலைப்பைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செயல்முறை ஆன்லைனில் இருக்கும் மற்றும் மென்பொருள் மூலம் வழிநடத்தப்படுவதால், விண்ணப்பத்தில் முரண்பாடுகளுக்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படும்,
இதன் விளைவாக விண்ணப்பங்கள் விரைவாக செயலாக்கப்படும். விண்ணப்பத்தின் தற்போதைய நிலை அனைத்து நிலைகளிலும் புதுப்பிக்கப்பட்டு, விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், தவறான தகவல் காரணமாக ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படுவதையும் உறுதி செய்கிறது.
விரிவான தகவல்களுக்கு, வெளியீட்டாளர்கள் மற்றும் பிற பங்கெடுப்பாளர்கள் பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் சட்டம் மற்றும் பிஆர்பி விதிகளின் விதிகளை கவனமாக படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1989267
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2008020
பத்திரிகை & பருவ இதழ்களின் பதிவு சட்டம், 2023:
https://mib.gov.in/sites/default/files/Press%20and%20Registration%20of%20Periodicals%20Act%202023.pdf
***
ANU/AD/BS/DL
(Release ID: 2010911)
Visitor Counter : 257
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam