பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ரூ. 1450 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிப்பு
Posted On:
10 OCT 2022 8:32PM by PIB Chennai
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ரூ. 1450 கோடி மதிப்பில் நீர்ப்பாசனம், எரிசக்தி, தண்ணீர் விநியோகம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு சம்பந்தமான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, அவற்றை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். சௌராஷ்ட்ரா அவதரன் நீர்ப்பாசன திட்டம் இணைப்பு 3-இன் 7-ஆம் தொகுப்பு, இணைப்பு 1-இன் 5-ஆம் தொகுப்பு மற்றும் ஹரிப்பார் 40 மெகாவாட் சூரிய மின்சக்தி தகடுகள் திட்டத்தை பிரதமர் அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட மோசமான பாதிப்புகளை நினைவு கூர்ந்தார். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், குஜராத் மாநிலம் முழுவதும் விரக்தி சூழ்நிலையை உருவாக்கியது. எனினும் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் அந்த மாநிலம் மீண்டும் எழுந்து, நாட்டின் முன்னணி மாநிலம் என்ற நிலைக்கு முன்னேறியது.
வளர்ச்சியின் ஐந்து உறுதிப்பாடுகள், குஜராத் மாநிலத்தின் திடமான அடித்தளத்தை உருவாக்கியிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். முதலாவது, மக்கள் சக்தி; இரண்டாவது, அறிவு சக்தி, மூன்றாவது, நீர் சக்தி; நான்காவது, எரிசக்தி ஆற்றல், ஐந்தாவது, பாதுகாப்பு சக்தி. “இந்த ஐந்து உறுதியான அடித்தளங்களை அடிப்படையாகக் கொண்டு குஜராத் மாநிலம் புதிய உச்சத்திற்கு உயர்கிறது”, என்று திரு மோடி தெரிவித்தார்.
ஏழை மக்களின் நலனுக்கு தமது அரசு முதல் முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். ஏழைகளின் நலனைக் கருத்தில் கொண்டு பிரதமரின் ஏழைகள் நலத் திட்டம், டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஒரே, நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் பயன்களையும் அவர் எடுத்துரைத்தார். உற்பத்தி மற்றும் கடல்சார் வளர்ச்சியின் மையமாக ஜாம்நகர் வளர்ந்து வருவதாகக் கூறிய பிரதமர், தேசிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜாம்நகர் ஆயுர்வேத பல்கலைக்கழகத்திற்கு, உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான சர்வதேச மையம், ஓர் மகுடமாக அமைந்துள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் திரு புபேந்திர பட்டேல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு சி. ஆர். பாட்டில் மற்றும் திருமதி பூனம்பென் மாடம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
*******
Bak/Sm/IDS
(Release ID: 1866851)
Visitor Counter : 174
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam