பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

15 முதல் 18 வயதுடைய 2 கோடி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 08 JAN 2022 7:10PM by PIB Chennai

தடுப்பூசி செலுத்தப்படும் வேகத்தை அனைவரும் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, கொவிட் தடுப்பு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியாவின் சுட்டுரையை மேற்கோள்காட்டி பிரதமர் கூறியிருப்பதாவது:

 

‘‘மிகச் சிறப்பு! நன்றாக செயல்பட்டுள்ளீர்கள்.. என் இளம் நண்பர்களே.

இந்த வேகத்தை நாம் தொடர்வோம்.

 

கொவிட்-19 தொடர்பான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அனைவரையும் வலியுறுத்துகிறேன்.’’

                                                                                ****************


(रिलीज़ आईडी: 1788624) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Malayalam , Marathi , Telugu , Bengali , Assamese , English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia