பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக 15 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 03 JAN 2022 10:20PM by PIB Chennai

இன்று தடுப்பூசி செலுத்திக் கொண்ட 15 வயதுக்கும், 18 வயதுக்கும் இடைப்பட்ட இளம் இந்தியர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வயது வகையினருக்கு தடுப்பூசி செலுத்துவது  இன்று தொடங்கியது. இவர்களின் பெற்றோர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 “கொவிட்-19-க்கு எதிராக நமது இளைஞர்களை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையை இன்று நாம் மேற்கொண்டிருக்கிறோம். தடுப்பூசி செலுத்திக் கொண்ட 15 வயதுக்கும், 18 வயதுக்கும் இடைப்பட்ட இளம் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அதே போல் இவர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள். வரும் நாட்களில் கூடுதலான இளைஞர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள நான் வலியுறுத்துகிறேன்!“ என்று  பிரதமர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் டுவிட்டர் பதிவுகளையும் பிரதமர் மறுபதிவேற்றம் செய்துள்ளார்.

***************


(Release ID: 1787355) Visitor Counter : 162