பிரதமர் அலுவலகம்
மும்பை மேற்கு மலட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு கருணைத் தொகையை பிரதமர் அறிவித்தார்
Posted On:
10 JUN 2021 2:36PM by PIB Chennai
மும்பை மேற்கு மலட் பகுதியில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
‘‘மும்பை மேற்கு மலட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனையடைந்தேன். இந்த சோகமான நேரத்தில், உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய நான் பிராத்திக்கிறேன்: பிரதமர் @narendramodi’’
உயிரழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாயும் கருணைத் தொகையாக பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.
----
(Release ID: 1725962)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam