பிரதமர் அலுவலகம்
டாக்டர் பாலாசாகேப் விகே பட்டீலின் சுயசரிதையை வெளியிட்டு, பிரவரா ஊரக கல்வி சங்கத்துக்கு அவரது பெயரை பிரதமர் சூட்ட உள்ளார்
प्रविष्टि तिथि:
12 OCT 2020 7:35PM by PIB Chennai
டாக்டர் பாலாசாகேப் விகே பட்டீலின் சுயசரிதையை வெளியிட்டு, பிரவரா ஊரக கல்வி சங்கத்துக்கு 'லோக்நேதே டாக்டர் பாலாசாகேப் விகே பட்டீல் பிரவரா ஊரக கல்வி சங்கம்' என்னும் பெயரை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் 13 அக்டோபர் காலை 11 மணிக்கு சூட்ட உள்ளார்
மக்களவை உறுப்பினராக பல முறை டாக்டர் பாலாசாகேப் விகே பட்டீல் சேவையாற்றியுள்ளார். தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சமூக நலனுக்காக அர்ப்பணித்து, வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறைகளில் அவர் ஆற்றிய சிறப்பான சேவையை சரியாக குறிக்கும் வகையில் அவரது சுயசரிதைக்கு 'தே வேச்வா கரணி' (நல்ல நோக்கத்துக்காக ஒருவரது வாழ்க்கையை அர்ப்பணித்தல்') என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஊரக மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியை அளிப்பதற்கும், பெண் குழந்தைக்கு அதிகாரமளிக்கவும் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள லோனியில் 1964-ஆம் ஆண்டு பிரவரா ஊரக கல்வி சங்கம் நிறுவப்பட்டது. மாணவர்களின் கல்வி, சமூக, பொருளாதார, கலாச்சார, உடல்நல மற்றும் மனநல வளர்ச்சிக்கு சேவையாற்றும் ஒற்றை நோக்கத்தில் இந்த சங்கம் தற்போது செயல்பட்டு வருகிறது..
***********************
(रिलीज़ आईडी: 1663806)
आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam