தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்த சிறந்த சுற்றுலாத் தலங்களை மாநில அரசுகள் பரிந்துரைக்க வேண்டும் – மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2026 1:09PM by PIB Chennai

தேசிய அளவிலான நிகழ்வுகளை வழக்கமாக நடைபெறும் இடங்களில் அல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவற்றை நடத்த வேண்டுமென்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் உத்வேகம் பெற்று, தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா, நாட்டின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் நடத்தப்படுவதாக தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திரு அஸ்வினி வைஷ்ணவ், சர்தார் வல்லபாய் படேலின் உலகின் உயரமான சிலை அமைந்துள்ள ஏக்தா நகர் உலகளவில் அங்கீகாரம் பெற்ற, ஈர்க்கக்கூடிய ஒரு சுற்றுலாத் தலமாக திகழ்கிறது என்று கூறினார். நாட்டின்  குடியரசுத்தலைவர், நாடு முழுவதிலுமிருந்து இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் இந்தப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்திற்கு வருகைதரும் போது, அந்த இடம் குறித்து மேலும் அறிந்து கொள்ளவும், அதை நேரில் அனுபவிக்கவும் மக்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார்.

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை அரங்குகளில் மட்டுமே நடத்தாமல், சுற்றுலாத் துறையின் மூலம் அதை மேம்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இம்முயற்சியின் நோக்கம் என்று அமைச்சர் கூறினார்.

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்த சிறந்த சுற்றுலாத் தலங்களை பரிந்துரைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் திரு அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பரிந்துரைகளில் அந்தச் சுற்றுலாத் தலங்களின் சிறந்த வசதிகள், முழுமேம்பாட்டிற்கான திட்டம் ஆகியவை குறித்து இடம்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அந்த வகையில் தேர்ந்தெடுக்கப்படும் மாநிலத்தின் சுற்றுலாத் தலத்தில் அடுத்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறும் என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313351&reg=3&lang=1

***

SS/IR/PS/SM 


(வெளியீட்டு அடையாள எண்: 2313400) வருகையாளர் எண்ணிக்கை : 16