பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு. நரேந்திரமோடிக்கு ஸ்லோவாக்கிய குடியரசின் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டது

प्रविष्टि तिथि: 15 JUN 2026 11:35PM by PIB Chennai

ஸ்லோவாக்கிய குடியரசு அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் மிக உயர்ந்த அரசு விருதான "ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ், ஃபர்ஸ்ட் கிளாஸ்"  விருதை வழங்கி கவுரவித்தார்.

 

இந்த உயரிய விருதினை வழங்கியதற்காக அதிபருக்கும், ஸ்லோவாக்கிய அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட பிரதமர், இது 140 கோடி இந்திய மக்களுக்கும், இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா இடையிலான நீடித்த நட்புறவிற்கும் கிடைத்த கௌரவம் என்று குறிப்பிட்டார்.

 

இந்த விருது இந்தியா மற்றும் ஸ்லோவாக்கிய மக்களுக்கு இடையே உள்ள அன்பு, நம்பிக்கை மற்றும் நேசத்தின் அடையாளமாகும் என்று குறிப்பிட்ட பிரதமர், வருங்கால சந்ததியினர் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தச் சிறப்பான நட்புறவைத் தொடர்ந்து வளர்த்தெடுக்க இந்த விருது ஊக்கமளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273323&reg=48&lang=2

 

செய்தி அடையான எண்:2273323

***

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2275669) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam