பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பர்காஷ் பூரப் நன்னாளையொட்டி, ஸ்ரீ குரு தேக் பகதூருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 07 APR 2026 10:52AM by PIB Chennai

பர்காஷ் பூரப் எனும் புனிதமான நன்னாளையொட்டி, நமது நாகரிகத்தின் மிகச்சிறந்த ஆன்மீகப் பேரொளியான ஸ்ரீ குரு தேக் பகதூருக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

"ஸ்ரீ குரு தேக் பகதூரின் பர்காஷ் பூரப் எனும் புனிதமான நன்னாளையொட்டி, நமது நாகரிகத்தின் மிகச்சிறந்த ஆன்மீகப் பேரொளியான அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவரது வாழ்க்கை அச்சமின்மை, தியாகம் மற்றும் மனிதசமூகத்தின் மீதான ஆழ்ந்த அக்கறை ஆகியவற்றிற்கு ஒரு ஒளிமிக்க உதாரணமாகத் திகழ்ந்தது. மிகக் கடுமையான இடர்பாடுகளை எதிர்கொண்டபோதும், அவர் உண்மை, கண்ணியம், நம்பிக்கை ஆகியவற்றைக் காப்பதில் உறுதியுடன் நின்றார். நீதி, கருணை மற்றும் நல்லிணக்கம் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதில், அவரது நிலையான போதனைகள் நமக்கு வழிகாட்டட்டும்."

***

SS/IR/KPG/SE


(रिलीज़ आईडी: 2268869) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam