பிரதமர் அலுவலகம்
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நூற்றாண்டு விழாவை நடத்த இந்தியாவிற்கு வாய்ப்பு: பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
प्रविष्टि तिथि:
26 NOV 2025 7:58PM by PIB Chennai
2030-ல் காமன்வெல்த் நூற்றாண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இந்தியா வென்றதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த சாதனை இந்தியாவின் கூட்டான அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டு உணர்வைப் பிரதிபலிக்கிறது என்றும், இது இந்தியாவை உலக விளையாட்டு வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி எழுதியிருப்பதாவது :
“2030-ல் காமன்வெல்த் நூற்றாண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது!
நாட்டு மக்களுக்கும் விளையாட்டுச் சூழலுக்கும் வாழ்த்துகள். நமது கூட்டான அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டு உணர்வு இந்தியாவை உலக விளையாட்டு வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.
வசுதைவ குடும்பகம் என்ற கொள்கையுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விளையாட்டுகளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட நாம் ஆர்வமாக உள்ளோம்.
உலகத்தை வரவேற்க நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்!
https://www.commonwealthsport.com/news/4408937/commonwealth-sport-confirms-amdavad-india-as-host-of-the-2030-centenary-games”
***
(Release ID: 2194953)
SS/SMB/KR
(रिलीज़ आईडी: 2195902)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
Telugu
,
Malayalam
,
Kannada
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati