பிரதமர் அலுவலகம்
முழுமையான சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான காரணியாக பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்துவதில் நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தும் கட்டுரை ஒன்றை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
प्रविष्टि तिथि:
24 NOV 2025 2:31PM by PIB Chennai
முழுமையான சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான காரணியாக பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்துவதில் நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தும் மத்திய அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:
“அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய இந்தக் கட்டுரையில், மரபு சார்ந்த பாரம்பரிய மருத்துவ முறையைக் கொண்டாடுவது மட்டுமின்றி, அதனை எதிர்காலத்திற்கு முன்னெடுத்துச் செல்வதற்கும் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முன்முயற்சிகளை மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
ஆரோக்கியம் என்பது குணப்படுத்தக் கூடியதாகவும், தீங்கு விளைவிக்காததாகவும், வளர்ச்சி என்பது நீடித்ததாகவும், அதிகமாக நுகரக்கூடாத நிலையிலும், அறிவியல் என்பது சேவைகளைக் கொண்டதாகவும், வாழ்வியல் முறையிலிருந்து பிரிக்காத வகையிலும் இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் வலுவான செய்தியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.”
***
(Release ID: 2193508)
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2193701)
आगंतुक पटल : 4