பிரதமர் அலுவலகம்
பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் மாற்றம் தரும் 11 ஆண்டுகள் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
प्रविष्टि तिथि:
28 AUG 2025 1:20PM by PIB Chennai
இந்தியா முழுவதும் நிதி உள்ளடக்க சூழலை மாற்றியமைத்த மாற்றம் தரும் முன்முயற்சியான பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் 11-வது ஆண்டு இது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் ஜன் தன் திட்டம் கண்ணியத்தை அதிகரித்துள்ளது என்பதை உறுதிபட தெரிவித்த திரு மோடி, கடைகோடி மக்களுக்கும் நிதி உள்ளடக்கத்தை தந்து தங்களின் வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் அதிகாரத்தையும் வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மைகவ் இந்தியா பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“நிதி உள்ளடக்கத்திலிருந்து அதிகாரமளிப்பதற்கு! இந்தியா முழுவதும் பிரதமரின் ஜன் தன் திட்டம் வாழ்க்கையில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றிய காட்சிகள் இங்கே. #11YearsOfJanDhan “
“கடைக்கோடி மக்களும் நிதி சார்ந்து இணைக்கப்படும்போது ஒட்டுமொத்த தேசமும் இணைந்து முன்னேறுகிறது. இதைத்தான் பிரதமரின் ஜன் தன் திட்டம் சரியாக சாதித்துள்ளது. இது கண்ணியத்தை அதிகரித்துள்ளதோடு தங்களின் வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் அதிகாரத்தையும் மக்களுக்கு வழங்கியுள்ளது.
#11YearsOfJanDhan”
***
(Release ID: 2161446)
AD/SMB/SG/KR
(रिलीज़ आईडी: 2161568)
आगंतुक पटल : 41
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam