உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் அசாம் ரைஃபிள்ஸ் ஏற்பாடு செய்திருந்த ஒற்றுமை விழா – ஒரே குரல், ஒரே நாடு நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்றார்

Posted On: 20 FEB 2025 7:30PM by PIB Chennai

புதுதில்லியில் அசாம் ரைஃபிள்ஸ் இன்று ஏற்பாடு செய்திருந்த ஒற்றுமை விழா – ஒரே குரல், ஒரே நாடு நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை விருந்தினராக பங்கேற்றார். அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் தலைமை இயக்குநர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒற்றுமை என்ற சொல் மிகவும் முக்கியமானது என்று நிகழ்வில் பேசிய திரு அமித் ஷா தெரிவித்தார்.  சதந்திரத்திற்குப்பின் பல ஆண்டுகாலம் வடகிழக்கு பகுதி புவியியல் ரீதியாகவும், உணர்வுபூர்வமாகவும் தில்லியிலிருந்து விலகியிருந்தது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி இதனை பல்வேறு தொடர்புகள் மூலம் சரி செய்தார் என்றும் அவர் கூறினார். 2027-க்குள் வடகிழக்கு பகுதியில் உள்ள எட்டு மாநிலங்களுக்கும் ரயில் மற்றும் விமானம் மூலம் தில்லியுடன் இணைப்பு ஏற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பொருளாதாரம், கலாச்சாரம், பாதுகாப்பு, விளையாட்டு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைகளில் வடகிழக்கு மாநிலங்களின் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார். வடகிழக்கு ஒற்றுமை விழாவிற்கு ஒரே குரல், ஒரே நாடு என்பதை மையப்பொருளாக வைத்திருப்பதை அவர் பாராட்டினார். இந்த ஐந்து நாள் ஒற்றுமை விழா வடகிழக்கின் ஒற்றுமையை தில்லியில் வெளிப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த விழாவின் போது, 712 அணிகள், 1,500 மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருப்பதை சுட்டிக்காட்டிய திரு அமித் ஷா, 150-க்கும் அதிகமான மாணவர்கள் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர் என்றார். இவற்றில் அதிக எண்ணிக்கையிலான பரிசுகளை மணிப்பூர் வென்றிருப்பது அங்கு விளையாட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை காட்டுகிறது என்று அவர் கூறினார்.

2036-ம் ஆண்டில் இந்தியா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் என்று நம்பிக்கை தெரிவித்த உள்துறை அமைச்சர், இதில் முதல் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்கும் என்றும், இந்த சாதனையில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105090    

***

SMB/RJ/DL


(Release ID: 2105115) Visitor Counter : 21