பிரதமர் அலுவலகம்
ஹூண்டாய் மோட்டார் குழுமத்தைச் சேர்ந்த திரு. யூசுன் சுங் உடன் பிரதமர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
24 OCT 2024 8:53PM by PIB Chennai
ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் செயல் தலைவர் திரு. யூசுன் சுங், பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிரா, இந்தியாவின் பொருளாதார சக்தி மையம் என்றும், ஹூண்டாய் குழுமம் போன்ற பெரிய முதலீடுகள் மாநில மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவுக்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
"சில நாட்களுக்கு முன்பு திரு யூசுன் சுங்கை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா, முதலீடு செய்வதற்கு சிறந்த இடம். புனேவில் உள்ள ஆலையின் மீதான ஹூண்டாயின் உற்சாகத்தைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். மகாராஷ்டிரா, இந்தியாவின் பொருளாதார சக்தியாகும், இது போன்ற பெரிய முதலீடுகள் மாநில மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.”
***
(Release ID: 2067944)
BR/KR
(रिलीज़ आईडी: 2067990)