பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள கோலாப்பூர் நினைவிடத்திற்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

प्रविष्टि तिथि: 21 AUG 2024 10:31PM by PIB Chennai

போலந்து நாட்டின் வார்சாவில் உள்ள கோலாப்பூர் நினைவிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவகம், கோலாப்பூரின் மகத்தான அரச குடும்பத்துக்கு செலுத்தும் மரியாதை என்று திரு மோடி கூறினார். இரண்டாம் உலகப் போரின் கொடூரங்களால் இடம்பெயர்ந்த போலந்து நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதில் இந்த அரச குடும்பம் முன்னணியில் இருந்தது என்று திரு மோடி மேலும் கூறினார்.

சத்ரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கோலாப்பூரின் மகத்தான அரச குடும்பம், மனிதநேயத்தை எல்லாவற்றிற்கும் மேலாக முன்னிறுத்தி, போலந்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்தது என்றும் பிரதமர் கூறினார்.

 

இது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

"வார்சாவில் உள்ள கோலாப்பூர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். இந்த நினைவகம் கோலாப்பூரின் சிறந்த அரச குடும்பத்திற்கு மரியாதை செலுத்துவதைக் குறிக்கிறது. இரண்டாம் உலகப் போரின் கொடூரங்களால் இடம்பெயர்ந்த போலந்தின்  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தங்குமிடம் வழங்கியதில் இந்த அரசக் குடும்பம் முன்னணியில் இருந்தது. சத்ரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கோலாப்பூரின் சிறந்த அரச குடும்பம் மனிதகுலத்தை எல்லாவற்றிற்கும் மேலாக முன்னிறுத்தி, போலந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்தது. கருணையின் அடிப்படையிலான இந்த செயல், பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும்."

BR/KR

***

 


(रिलीज़ आईडी: 2047517) आगंतुक पटल : 100
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam