பிரதமர் அலுவலகம்
புதிதாக பொறுப்பேற்கவுள்ள இந்தோனேசிய அதிபர், பிரதமருடன் தொலைபேசி மூலம் உரையாடல் – இரு தலைவர்களும் கூட்டாண்மை உத்தி குறித்து விவாதித்தனர்
Posted On:
20 JUN 2024 1:07PM by PIB Chennai
இந்தோனேசிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபோவோ சுபியான்டோ, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபோவோ சுபியான்டோவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிபராக பொறுப்பேற்கவுள்ள அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். நமது நாகரீக உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் இடையிலான விரிவான உத்திபூர்வ கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.”
***
(Release ID: 2026910)
AD/PKV/AG/RR
(Release ID: 2026938)
Visitor Counter : 74
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam