பிரதமர் அலுவலகம்
புத்தபிரானின் கோட்பாடுகளுக்குப் பிரதமர் புகழாரம்
प्रविष्टि तिथि:
05 MAR 2024 9:47AM by PIB Chennai
தாய்லாந்தில் 2024 பிப்ரவரி 23 முதல் மார்ச் 3, வரை புத்தபிரான் மற்றும் அவரது சீடர்களான அரஹந்த் சாரி புத்தா மற்றும் அரஹந்த் மகா மொக்கல்லனா ஆகியோரின் புனிதச் சின்னங்களை லட்சக்கணக்கான பக்தர்கள் தலைவணங்கி மரியாதை செலுத்தியதை அடுத்து, பிரதமர் திரு நரேந்திர மோடி புத்தரின் கோட்பாடுகளைப் பாராட்டியுள்ளார்.
வரும் நாட்களில் நினைவுச்சின்னங்கள் புனிதப்படுத்தப்படும் சியாங் மாய், உபோன் ரட்சதானி, கிராபி ஆகிய இடங்களில் பக்தர்கள் வணங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"புத்தபிரானின் சிந்தனைகள் இந்தியாவுக்கும், தாய்லாந்துக்கும் இடையே ஒரு ஆன்மீகப் பாலமாக செயல்படுகின்றன. ஆழமான வேரூன்றிய தொடர்பை வளர்க்கின்றன. பக்தர்களுக்கு ஆன்மீக ரீதியாக வளமான அனுபவம் கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் வரும் நாட்களில் நினைவுச்சின்னங்கள் புனிதப்படுத்தப்படும் சியாங் மாய், உபோன் ரட்சதானி, கிராபி ஆகிய இடங்களில் பக்தர்கள் வணங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
***
PKV/AG/KV
(रिलीज़ आईडी: 2011505)
आगंतुक पटल : 175
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam