பிரதமர் அலுவலகம்

ஷர்மிஸ்தா முகர்ஜியிடமிருந்து 'பிரணாப் மை ஃபாதர்: ஏ டாட்டர் ரிமெம்பர்ஸ்’ என்ற நூலின் பிரதியைப் பிரதமர் பெற்றுக்கொண்டார்

Posted On: 15 JAN 2024 6:45PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவரின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, 'பிரணாப் மை ஃபாதர்: ஏ டாட்டர் ரிமெம்பர்ஸ்’ (எனது தந்தை பிரணாப்: ஒரு மகளின் நினைவுகள்) என்ற புத்தகத்தின்  பிரதியைப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"ஷர்மிஸ்தா ஜி உங்களைச் சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சியடைகிறேன். பிரணாப் பாபுவுடனான மறக்கமுடியாத உரையாடல்களை நினைவில் கொள்கிறேன். அவரின் மகத்துவமும், ஞானமும், அறிவின் ஆழமும் உங்கள் நூலில் தெளிவாகத் தெரிகிறது!"

**********


ANU/ SMB/PKV/RR/KV



(Release ID: 1996533) Visitor Counter : 77