பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்-2022 61 கிலோ எடைப்பிரிவில் ராஜ் குமாரி வென்ற வெண்கலப் பதக்கத்தைப் பிரதமர் கொண்டாடினார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 OCT 2023 6:54PM by PIB Chennai

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் பாரா பவர் லிஃப்டிங் 61 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ராஜ் குமாரிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

“மகளிருக்கான பாரா பவர் லிஃப்டிங் 61 கிலோ எடைப்பிரிவில் ராஜ் குமாரி வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. அவரது வெற்றி வளர்ந்து வரும் பல விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.”

***

(Release ID: 1971031)

ANU/PKV/SMB/AG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1972209) வருகையாளர் எண்ணிக்கை : 127