பிரதமர் அலுவலகம்
பெண் எம்.பி.க்கள் முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது ஜனநாயகத்தை மிகவும் துடிப்பானதாக மாற்றுகிறார்கள்: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
11 OCT 2023 8:59PM by PIB Chennai
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனநாயகம் செழுமை அடைந்துள்ளதாகக் கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, மக்களின் குரலை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் ஒரு கட்டுரையை அவர் பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமது ஜனநாயகத்தை எவ்வாறு துடிப்பானதாக மாற்றுகிறார்கள் என்பதையும், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் பல முக்கிய துறைகளில் அவர்கள் கவனம் செலுத்துவது பற்றியும் ஷமிகா ரவியின் @ShamikaRavi கட்டுரை சுவாரசியமாக எடுத்துரைக்கிறது. இது மிகவும் ஊக்கமளிக்கும் போக்கு. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, மக்களின் குரலை எவ்வாறு வலுப்படுத்தும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
https://indianexpress.com/article/columns/women-mps-contribution-has-increased-in-parliament-data-proves-it-8977046/"
***
(Release ID: 1966849)
ANU/SMB/BR/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1967553)
வருகையாளர் எண்ணிக்கை : 170
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam