பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பல தசாப்தங்களுக்குப் பின் குதிரையேற்ற அணி வரலாற்றுச் சிறப்புடன் தங்கப் பதக்கம் வென்றதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
Posted On:
26 SEP 2023 4:24PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் குதிரையேற்ற அணிப் பிரிவில் 41 ஆண்டுகளுக்குப் பின் தங்கப் பதக்கம் வென்ற ஹிருதய் சேடா, அனுஷ் அகர்வாலா, சுதிப்தி ஹஜேலா, திவ்யக்ரித் சிங் ஆகியோருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"பல தசாப்தங்களுக்குப் பின், நமது குதிரையேற்ற அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது மிகவும் பெருமைக்குரிய விஷயம் ஆகும்!
ஹிருதய் சேடா, அனுஷ் அகர்வாலா, சுதிப்தி ஹஜேலா, திவ்யக்ரீத் சிங் ஆகியோர் இணையற்ற திறமை, அணி உணர்வை வெளிப்படுத்தி சர்வதேச அரங்கில் நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த வரலாற்று சாதனைக்காக இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
***
(Release ID: 1960883)
ANU/AP/SMB/KV/KRS
(Release ID: 1961042)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam