மத்திய அமைச்சரவை

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி/5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 07 JUN 2023 2:56PM by PIB Chennai

புனரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீட்டுடன் 3-வது புனரமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சமபங்கு அளிப்பதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி/5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் இதில் அடங்கும்.

இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.1,50,000 கோடியிலிருந்து ரூ.2,10,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பிக்கப்பட்ட நிதியுதவித் திட்டத்தின் மூலம் நாட்டின் தொலை தூரப் பகுதிகளுக்கும் தொடர்பு வசதி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நிலையான தொலைத்தகவல் சேவை நிறுவனமாக பிஎஸ்என்எல் வளர்ச்சி பெறும்.

அலைவரிசை

அலைக்கற்றை ஒதுக்கீடு

பட்ஜெட் ஒதுக்கீடு (கோடியில் )

700 மெகாஹெர்ட்ஸ்

22 எல்எஸ்ஏ-க்களில் 10 மெகாஹெர்ட்ஸ்

ரூ. 46,338.60

3300 மெகாஹெர்ட்ஸ்

22 எல்எஸ்ஏ-க்களில் 70 மெகாஹெர்ட்ஸ்

ரூ. 26,184.20

26 ஜிகாஹெர்ட்ஸ்

21 எல்எஸ்ஏ-க்களில் 800 மெகாஹெர்ட்ஸ், ஒரு எல்எஸ்ஏ-ல் 650 மெகாஹெர்ட்ஸ்

ரூ. 6,564.93

2500 மெகாஹெர்ட்ஸ்

6 எல்எஸ்ஏ-க்களில் 20 மெகாஹெர்ட்ஸ், 2 எல்எஸ்ஏ-க்களில் 10 மெகாஹெர்ட்ஸ்

ரூ. 9,428.20

 

பல்வகை பொருட்கள்

ரூ.531.89

மொத்தம்

 

ரூ.89,047.82

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930442

***

AD/SMB/RR/GK(Release ID: 1930480) Visitor Counter : 178