பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் கொண்ட 4வது ஆக்கபூர்வ உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது

இது பாதுகாப்புத் துறையின் ஆக்கப்பூர்வ வளர்ச்சியாகும் என்று பிரதமர் கூறியுள்ளார்

प्रविष्टि तिथि: 16 MAY 2023 9:39AM by PIB Chennai

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் கொண்ட  4வது ஆக்கபூர்வ  உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். ரூ. 715 கோடி மதிப்புள்ள இறக்குமதி மானியத்துடனான இந்தப் பட்டியலில் உயர் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் அடங்கும். 

திரு ராஜ்நாத் சிங்கின் ட்விட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;

“பாதுகாப்புத் துறையின் ஆக்கப்பூர்வ வளர்ச்சியாகும். தற்சார்பு இந்தியா என்ற நமது தீர்மானத்தை இது வலுப்படுத்துவதோடு உள்நாட்டு தொழில் திறனை ஊக்கப்படுத்தும்.”

****

(Release ID: 1924358)

SMB/RR/SG


(रिलीज़ आईडी: 1924402) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam