பிரதமர் அலுவலகம்
பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகங்களின் முக்கிய காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
புலிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரின் கடின உழைப்பிற்கும் பாராட்டு
प्रविष्टि तिथि:
09 APR 2023 10:31PM by PIB Chennai
பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகங்களுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி அதன் முக்கிய காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். புலிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், காவலர்கள், புலிகள் காப்பக முன்கள ஊழியர்கள் மற்றும் அனைவரின் கடின உழைப்பிற்கும் அவர் பாராட்டு தெரிவிதுள்ளார்.
தொடர் ட்விட்டர் பதிவுகளில் அவர் கூறியிருப்பதாவது:
“பன்முகத்தன்மை வாய்ந்த தாரங்கள், விலங்குகள் மற்றும் புலிகளின் கணக்கெடுப்பு குறித்த நற்செய்தியின் மத்தியில் இது ஒரு சிறப்பான நாள். இன்றைய நிகழ்வுகளின் முக்கிய காட்சிகள், இதோ.”
“பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகங்களுக்கு மேற்கொண்ட மறக்க முடியாத பயணத்தை நான் நிறைவு செய்யும் வேளையில், புலிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், காவலர்கள், புலிகள் காப்பக முன்கள ஊழியர்கள் மற்றும் அனைவரின் கடின உழைப்பையும் பாராட்டுகிறேன். அவர்களது அதீத ஆர்வம் மற்றும் முயற்சிகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.”
***
AD/BR/KPG
(रिलीज़ आईडी: 1915292)
आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam