பிரதமர் அலுவலகம்
2023 தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளுக்கு விண்ணப்பிக்குமாறு புதிய கண்டுபிடிப்பாளர்களை கேட்டுக்கொண்ட பிரதமர்
Posted On:
08 APR 2023 11:37AM by PIB Chennai
2023-ம் ஆண்டுக்கான தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளுக்கு விண்ணப்பிக்குமாறு புதிய கண்டுபிடிப்பாளர்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு.பியூஷ் கோயலின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "ஸ்டார்ட்அப்கள்" புதிய கண்டுபிடிப்புகளால் மட்டுமல்லாமல், அவற்றைக் கட்டியெழுப்புபவர்களின் எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களினாலும் கவர்ச்சிகரமானவை. ஸ்டார்ட்அப் என்ற வார்த்தை நமது இளைஞர் சக்தியின் உணர்வை வெளிப்படுத்துகிறது.
தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2023-க்கு startupindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க புதிய கண்டுபிடிப்பாளர்களை வலியுறுத்துகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
***
CR/SM/DL/RS
(Release ID: 1914866)
Visitor Counter : 181
Read this release in:
Bengali
,
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu