பிரதமர் அலுவலகம்

பிரதமருடன் என்எக்ஸ்பி செமிகண்டக்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்திப்பு

Posted On: 30 MAR 2023 10:16AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடியை  என்எக்ஸ்பி செமிகண்டக்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு.குட் சிவெர்ஸ் சந்தித்தார்.

என்எக்ஸ்பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் பதிலளித்து கூறியிருப்பதாவது :

“என்எக்ஸ்பி தலைமை செயல் அதிகாரி திரு.குட் சிவெர்ஸை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. செமிகண்டக்டர் உலகில், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மாற்றம் குறித்து விவாதித்தோம். நமது இளம் திறமையாளர்களின் ஆற்றலால், இந்தத் துறைகளில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்து வருகிறது”.

***


(Release ID: 1912094)

SRI/PKV/RR



(Release ID: 1912126) Visitor Counter : 135