பிரதமர் அலுவலகம்
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் மேற்கொண்ட அண்மைப் பயணத்தின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
வளர்ச்சியின் ஆற்றல் மையமான கர்நாடகம், நாட்டுக்கு பல துறைகளில் பங்களிக்கிறது : பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAR 2023 11:03AM by PIB Chennai
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் தாம் அண்மையில் மேற்கொண்ட பயணத்தின் காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். மாண்டியா பிரமிக்கவைக்கிறது. மக்களின் அன்பு எப்போதும் போற்றுதலுக்கு உரியதாகும் என்று அவர் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சுமலதா அம்பரீஷ் வெளியிட்டிருந்த ட்விட்டருக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
“மாண்டியா பிரமிக்கவைக்கிறது! மக்களின் அன்பு எப்போதும் போற்றுதலுக்கு உரியது.”
மேலும், பிண்டிகனவிலேயைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் ட்விட்டருக்கும் பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
"வளர்ச்சியின் ஆற்றல் மையமாகத் திகழும் கர்நாடகம், நாட்டுக்கு பல துறைகளில் பங்களிக்கிறது. இந்த சிறந்த மாநிலத்தின் மக்களுக்கு சேவை செய்வது ஒரு கவுரவமாகும்."
***
AD/PKV/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1906306)
வருகையாளர் எண்ணிக்கை : 216
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada