பிரதமர் அலுவலகம்
சர்வதேச பால்வள கூட்டமைப்பு உலக பால்வள உச்சிமாநாடு 2022ஐ செப்டம்பர் 12-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்
Posted On:
10 SEP 2022 9:41PM by PIB Chennai
பெருநகர நொய்டாவில் இந்திய எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் சர்வதேச பால்வள கூட்டமைப்பு உலக பால்வள உச்சிமாநாடு 2022ஐ செப்டம்பர் 12-ஆம் தேதி காலை 1030 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைப்பார்.
செப்டம்பர் 12 முதல் 15 வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, 'ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத்திற்கு பால்வளம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட தொழில்துறை தலைவர்கள், வல்லுநர்கள், விவசாயிகள் மற்றும் கொள்கை தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட உலகளாவிய மற்றும் இந்திய பால்வள பகுதாரர்களின் கூட்டமாகும். இதில் 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1500 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர், இந்தியாவில் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு, 1974-ஆம் ஆண்டு இந்த உச்சிமாநாடு நடைபெற்றது.
பெண்கள் மற்றும் சிறிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள பால்வள விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் கூட்டுறவு மாதிரியை அடிப்படையாகக் கொண்டிருப்பது இந்திய பால்வள தொழில்துறையின் தனித்தன்மையாகும். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, பால்வளத் துறையின் மேம்பாட்டிற்காக அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் விளைவாக கடந்த எட்டு ஆண்டுகளில் பால் உற்பத்தி சுமார் 44% உயர்ந்துள்ளது. உலகளாவிய பால் உற்பத்தியில் 23% பங்களிப்பை வழங்கி, ஆண்டுதோறும் 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து, 8 கோடிக்கும் அதிகமான பால்வள விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் இந்திய பால்வள துறையின் வெற்றிப் பயணம் இந்த உச்சிமாநாட்டில் எடுத்துரைக்கப்படும். சர்வதேச நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்து இந்திய விவசாயிகள் தெரிந்து கொள்ளவும் இந்த உச்சிமாநாடு உதவிகரமாக இருக்கும்.
------
(Release ID: 1858484)
Visitor Counter : 186
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam