பிரதமர் அலுவலகம்

நிலநடுக்கத்திற்குப் பிறகு கட்ச்சின் வளர்ச்சி பற்றிய காணொளியை பிரதமர் பகிர்வு

Posted On: 28 AUG 2022 1:26PM by PIB Chennai

நிலநடுக்கத்திற்குப் பிறகு, தொழில்துறை, வேளாண்மை, சுற்றுலா உள்ளிட்டவற்றின் முனையமாக வளர்ச்சி அடையும் குஜராத் மாநிலம் கட்ச்சின் முன்னேற்றம் பற்றிய காணொளி ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். அப்போதைய குஜராத் முதல்வரான திரு நரேந்திர மோடியின் அபாரமான பணிகள் பற்றி மக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ட்விட்டர் கணக்கான மோடி ஸ்டோரியில் இந்த காணொளி ட்வீட் செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு கட்ச்சிற்கு மறுவாழ்வு அளித்த அப்போதைய குஜராத் முதல்வரின் தலைமையை மக்கள் பாராட்டியுள்ளனர்.

 

பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியதாவது:

 

“2001-இல் நிகழ்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கட்ச் பற்றி ஏராளமானோர் பல்வேறு விதமாகப் பேசினார்கள். கட்ச்சால் மீண்டும் எழ முடியாது என்று கருத்து தெரிவித்த நிலையிலும் கட்ச்சின் உணர்வைக் குறைத்து மதிப்பிடுவதாகவே அந்த விமர்சனங்கள் அமைந்தன.

குறுகிய காலத்தில் கட்ச் வளர்ச்சி பெற்றதுடன், வேகமாக முன்னேறும் மாவட்டங்களில் ஒன்றாக மாறியது.”

**************



(Release ID: 1855002) Visitor Counter : 124