பிரதமர் அலுவலகம்

உஜ்வாலா திட்ட மானியம் தொடர்பான இன்றைய முடிவு, குடும்ப வரவு செலவு கணக்கை பெருமளவில் எளிதாக்கும்: பிரதமர்

Posted On: 21 MAY 2022 8:16PM by PIB Chennai

பெட்ரோல் மற்றும் டீசல்  விலைகளின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி, பல்வேறு துறைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், நம் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கும்: பிரதமர்

உஜ்வாலா திட்ட மானியம் குறித்து இன்று எடுக்கப்பட்ட முடிவுகளும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளின் வீழ்ச்சியும் பல்வேறு துறைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், நமது குடிமக்களுக்கு நிவாரணத்தை வழங்கும், ‘எளிதான வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்படுத்தித் தரும்  என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

முடிவுகள் பற்றிய நிதியமைச்சரின் சுட்டுரைச் செய்திகளை மேற்கோள்காட்டி, பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“மக்களுக்கு தான் நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறோம்!

இன்றைய முடிவுகள், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி தொடர்பானது, பல்வேறு துறைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், நம் நாட்டு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும், மேலும் ‘எளிதான வாழ்க்கையை' ஏற்படுத்தித் தரும்.

“உஜ்வாலா திட்டம், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பேருதவியாக இருந்துள்ளது. உஜ்வாலா மானியம் தொடர்பான இன்றைய முடிவுகள், குடும்ப வரவு செலவு கணக்கை பெருமளவு எளிதாக்கும்.

***********



(Release ID: 1827340) Visitor Counter : 188