பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் தேவேந்திர படேலின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 APR 2022 2:59PM by PIB Chennai

பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தேவேந்திர படேலின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவதற்கு டாக்டர் படேலின் பங்களிப்பைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது ;

“சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சை மேம்படுத்துவதற்கான அவரின் முயற்சிகள் காரணமாக டாக்டர் தேவேந்திர படேல் ஏராளமான மக்களின் மதிப்பையும், நல்லெண்ணத்தையும் பெற்றவராவார். மருத்துவம் பற்றிய அவரின் ஆழமான ஞானமும், இரக்கக் குணமும் எப்போதும் நினைவு கூரப்படும்.  அவரது மறைவால் துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்கள்.   ஓம் சாந்தி”

                                                                          

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1813678) வருகையாளர் எண்ணிக்கை : 164