பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

புதிய முதலீட்டுக் கொள்கை 2012-ஐ இந்துஸ்தான் உர்வாரக் மற்றும் ராசயான் நிறுவனத்தின் மூன்று அலகுகளுக்குப் பொருந்துவதை நீடிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 22 MAR 2022 2:42PM by PIB Chennai

புதிய முதலீட்டுக் கொள்கை 2012-ஐ இந்துஸ்தான் உர்வாரக் மற்றும் ராசயான் நிறுவனத்தின் (எச்யுஆர்எல்) மூன்று அலகுகளுக்கு அதாவது கோரக்பூர், சிந்ரி, பரவ்னி ஆகியவற்றுக்குப் பொருந்துவதை நீடிப்பதற்கான உரத்துறையின் முன்மொழிவை பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பரவ்னி அலகு ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் நிறுவு திறன் கொண்ட எரிவாயு அடிப்படையிலான புதிய யூரியா உற்பத்தியை தொடங்கி உள்ளது. மூன்று எச்யுஆர்எல் யூரியா திட்டங்களின் செலவு ரூ.25.120 கோடியாகும். இந்த மூன்று பிரிவுகளுக்கும் இந்திய எரிவாயு ஆணையம், இயற்கை எரிவாயுவை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் விவசாயிகளுக்கு உரத்தேவையை நிறைவு செய்வது மட்டுமின்றி இந்தப் பிராந்தியத்தில் சாலைகள், ரயில் போக்குவரத்து, துணை தொழில்கள் போன்ற கட்டமைப்பு மேம்பாட்டையும் ஊக்கப்படுத்துகிறது. மேலும் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட 7 மாநிலங்களின் உரத்தேவையை எதிர்கொள்ள உலகின் சிறந்த தொழில்நுட்பங்களுடன் மூன்று அலகுகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

 

********


(Release ID: 1808192) Visitor Counter : 194