பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாத்ருபூமி பத்திரிகையின் ஓராண்டு கால நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை பிரதமர் 18-ந் தேதி தொடங்கிவைக்கிறார்

प्रविष्टि तिथि: 17 MAR 2022 11:07AM by PIB Chennai

மலையாள மொழி பத்திரிகையான ‘மாத்ருபூமி’யின் நூற்றாண்டு விழாவையொட்டி ஓராண்டுகால கொண்டாட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி 18-ந் தேதி  காலை 11 மணியளவில் காணொலி மூலம் தொடங்கிவைக்கிறார்.

 மாத்ருபூமி பத்திரிகை 1923-ஆம் ஆண்டு மார்ச் 18-ந் தேதி தொடங்கப்பட்டது. தேசிய நலன் சார்ந்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டுவருவதுடன், சமூக சீர்திருத்தங்கள், வளர்ச்சி ஆகியவற்றை கொண்டு செல்வதிலும் முன்னணியில் உள்ளது. மாத்ருபூமி 15 பதிப்புகள், 11 பருவ இதழ்களுடன் வெளியாகிறது. மேலும் மாத்ருபூமியின் புத்தகப்பிரிவு, சமகால விஷயங்கள் குறித்த ஏராளமான தலைப்புகளில் புத்தகங்களை பதிப்பித்து வருகிறது.

***************


(रिलीज़ आईडी: 1806912) आगंतुक पटल : 328
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam