பிரதமர் அலுவலகம்

ஐதராபாதில் துறவி ஸ்ரீராமானுஜாச்சார்யா நினைவாக சமத்துவ சிலையின் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 05 FEB 2022 10:17PM by PIB Chennai

ஓம் அஸ்மத் குருபயோ நமஹ!

ஓம் ஸ்ரீமத் ராமானுஜாய நமஹ!

 இந்த நிகழ்ச்சியில் நம்முடன் தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், மதிப்பிற்குரிய ஜீயர் சுவாமி அவர்கள் மத்திய அமைச்சரவையின் எனது சகா ஜி.கிஷண் ரெட்டி அவர்கள், மதிப்பிற்குரிய டாக்டர் ராமேஷ்வர் ராவ் அவர்கள் பகவத் மகத்துவத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட மதிப்புக்குரிய துறவிகள், பெரியோர்கள் மற்றும் தாய்மார்கள் நம்முடன் உள்ளனர்.

இன்றைய தினம் சரஸ்வதி தேவியை வழிபடும் புனிதமான வசந்த பஞ்சமி நாளாகும். இந்த நாளில் ஸ்ரீராமானுஜாச்சாரியா அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

 சற்று நேரத்திற்கு முன் 108 திவ்ய தேச ஆலயங்களை நான் பார்வையிட்டேன். இந்தியா முழுவதும் ஆழ்வார்களால் பயணம் மேற்கொள்ளப்பட்ட 108 திவ்ய தேச ஆலயங்களை ஸ்ரீராமானுஜாச்சாரியா அவர்களின் கருணையால் காண முடிந்தது.  மதிப்பிற்குரிய ஜீயர் சுவாமி அவர்களின் பேரன்புடன் விஸ்வக்சேனா இஷ்டி யாகத்தில் பங்கேற்கும் வாய்ப்பையும் இன்று  நான்  பெற்றிருக்கிறேன். இதற்காக அவருக்கு நான் சிறப்பு நன்றியைத் தெரிவிக்கிறேன்.

“நாம் ‘அத்வைதத்தை’ பெற்றிருக்கும் அதே வேளையில் ‘த்வைதத்தையும்’ பெற்றிருக்கிறோம். மேலும் ‘த்வைதத்தையும்’, ‘அத்வைதத்தை’யும் இணைக்கும் ஸ்ரீராமானுஜாச்சாரியாவின் ‘விசிஷ்டாத்வைதத்தை’யும் கொண்டுள்ளோம். ஸ்ரீராமானுஜர் ஒரு பக்கம் மதிப்புமிக்க சன்னியாசிகள் பாரம்பரியத்தையும், மறுபக்கம் கீதா பாஸ்ய செயல்பாட்டின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் துறவியாக விளங்கினார். இந்தியாவின் சமுக சீர்திருத்தங்கள், முற்போக்கு அம்சங்கள் ஆகியவை அதன் வேர்களுக்கு அப்பாற்பட்டவை என்று கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரீராமானுஜரை நாம் காணும் போது முற்போக்கு மற்றும் பழமைக்கு இடையே முரண்பாடு இல்லை என்ற  உண்மையை  நாம் உணர்கிறோம். இவர் தமது மொத்த வாழ்க்கையும் கர்மயோகத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டவர். தமது பாடல்களை சமஸ்கிருதத்தில் பாடிய ராமானுஜாச்சாரியா பக்தி மார்க்கத்தில்  தமிழ் மொழிக்கும் அதே அளவு முக்கியத்துவம் அளித்தவர். இப்போதும் கூட ராமானுஜ பாரம்பரியம் கொண்ட கோவில்களில் ‘திருப்பாவை’ பாடாமல் எந்த சம்பிரதாயமும் நிறைவடைவதில்லை.

நண்பர்களே,

சமூக சீர்திருத்தங்கள், முற்போக்கு சிந்தனைகள் என்று வரும் போது இவை நமது வேர்களுக்கு அப்பாற்பட்டவை என்று கூறப்படுகிறது. ஆனால்  ஸ்ரீராமானுஜரை நாம் காணும் போது முற்போக்கு சிந்தனைக்கும், பழமைக்கும் இடையே முரண்பாடு இல்லை என்பதை நாம் உணர்கிறோம். சீர்திருத்தங்களுக்கு உங்களின் வேர்களில் இருந்து வெகுதூரம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஸ்ரீராமானுஜர் சமூகசீர்திருத்தங்களுக்கு உண்மையான சிந்தனையை அறிமுகம் செய்தவர்.

நண்பர்களே,

நமது சமூகத்திற்குள் இருந்தே சமூக சீர்திருத்தங்களுக்கான மக்கள் வருகிறார்கள் என்பது நமது கலாச்சாரத்தின் சிறப்பம்சமாகும். சமூகத்தில் சில தீய சக்திகள் உருவாகும் போது  நம்மிடையே சில மகான்கள் பிறக்கிறார்கள். இதுவே பல ஆயிரம் ஆண்டுகளின் அனுபவமாக இருக்கிறது.  இத்தகைய சீர்திருத்தவாதிகள் ஏற்கப்படுகிறார்களோ இல்லையோ, சவால்களை எதிர்கொள்கிறார்களோ இல்லையோ தங்களின் தத்துவத்தில் உறுதியாக இருந்து ஒட்டுமொத்த சக்தியையும் சமூகத்தின் தீமைகளுக்கு  எதிராக இவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

சகோதர, சகோதரிகளே,

இந்தியாவின் விடுதலைப் போராட்டம் அதன் அதிகாரத்திற்கும், உரிமைகளுக்கும் மட்டுமானதாக இருக்கவில்லை. இந்தப் போராட்டத்தில் ஒரு பக்கம் காலனிய மனநிலையும், மறுபக்கம் வாழு, வாழவிடு என்ற கோட்பாடும் இருந்தது.  ஒரு பக்கம் இது இன ஆதிக்கம் மற்றும் பொருள்முதல்வாத எண்ணமாக இருந்தது. மறு பக்கம் மனிதகுலம் மற்றும் ஆன்மீகத்தின் மீதான நம்பிக்கையாக இருந்தது. இந்த போராட்டத்தில் இந்தியாவும் அதன் பாரம்பரியமும் வெற்றி கொண்டது. இந்தியாவின் விடுதலைப் போராட்டம் துறவிகளிடமிருந்து பெறப்பட்ட சமத்துவம், மனிதாபிமானம், ஆன்மீகம் என்ற சக்தியால் நடத்தப்பட்டது.

நண்பர்களே,

சமூக சீர்திருத்தங்கள், தலித்கள் மற்றும் பிற்படுத்தப் பட்டோருக்கு பாடுதல் என்ற உண்மையான கோட்பாட்டை நாட்டுக்கு பரிச்சயமாக்கியவர் ஸ்ரீராமானுஜர். இன்று பிரம்மாண்டமான சமத்துவத்தின் சிலை வடிவில் சமத்துவச் செய்தியை அவர் வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரது செய்தியைத் தொடர்ந்து நாடு இன்று புதிய எதிர்காலத்திற்கு ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி’ என்ற அடித்தளத்தை அமைத்திருக்கிறது. எந்த பாகுபாடும் இல்லாமல்  அனைவரின் வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும் கூட்டாகப் பாடுபடுகிறோம். இதனால் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் முழுமையான கௌரவத்துடன் நாட்டின் வளர்ச்சியில்  பங்குதாரர்களாக மாறியிருக்கிறார்கள். கான்கிரீட் வீடுகள், விலையில்லா சமையல் எரிவாயு இணைப்புகள், ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சை, கட்டணமின்றி மின்சார இணைப்புகள், ஜன் தன் கணக்குகள், தூய்மை இந்தியா திட்டம் போன்றவை தலித்துகளையும், பிற்படுத்தப் பட்டவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் வலுப்படுத்தி யிருக்கின்றன.

இதே உணர்வுடன் இந்த புனிதமான விழாவின் ஒரு பகுதியாக எனக்கு வாய்ப்பு அளித்துள்ள மதிப்பிற்குரிய சுவாமி அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். ராமானுஜாச்சாரியா சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பரவி உள்ள அனைவருக்கும் நான் நல்வாழ்த்துக்களை தெரிவித்து உரையை நிறைவு செய்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் நன்றி!

***************


(Release ID: 1795838)



(Release ID: 1796200) Visitor Counter : 235