நிதி அமைச்சகம்
3.8 கோடி வீடுகளுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் குழாய் இணைப்பு ஏற்படுத்த ரூ. 60,000 கோடி அளவுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
Posted On:
01 FEB 2022 1:13PM by PIB Chennai
2022 – 23 ஆம் நிதியாண்டில் 3.8 கோடி வீடுகளுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் குழாய் இணைப்பு ஏற்படுத்த ரூ. 60,000 கோடி அளவுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குடிமக்களுக்கு குறிப்பாக ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதன்படி, வீட்டு வசதி, மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தூய்மையான குடிநீர் வழங்க ஏதுவாக 8.7 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதில் 5.5 கோடி வீடுகளுக்கு கடந்த இரண்டாண்டுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் 80 லட்சம் வீடுகள் கட்ட 48,000 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்படும்.
அனைத்து அஞ்சல் அலுவலக வங்கி சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். 75 மாவட்டங்களில் 75 மின்னணு வங்கிப் பிரிவுகளை, வர்த்தக வங்கிகள் ஏற்படுத்தும்.
***************
(Release ID: 1794311)
Visitor Counter : 302
Read this release in:
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Kannada
,
English
,
Bengali
,
Gujarati
,
Telugu
,
Malayalam