பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

2022, ஜனவரி 30 மனதின் குரல் நிகழ்வுக்கு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பகிருமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்

Posted On: 19 JAN 2022 11:12AM by PIB Chennai

2022, ஜனவரி 30 அன்று இடம் பெற உள்ள மனதின் குரல் நிகழ்வுக்கு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பகிருமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“இம்மாதம் 30-ந் தேதி 2022-ன் முதலாவது #மனதின் குரல் நிகழ்வு இடம் பெறும். ஊக்கமளிக்கும் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் தலைப்புகளில் பகிர்ந்து கொள்வதற்கு உங்களிடம் ஏராளமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அவற்றை @mygovindia  அல்லது நமோ செயலியில் பகிருங்கள். 1800-11-7800 என்ற எண்ணுக்கு அழைத்து உங்களின் தகவலைப் பதிவு செய்யுங்கள்”.

***(Release ID: 1790897) Visitor Counter : 158