பிரதமர் அலுவலகம்
50-வது வெற்றி தினத்தன்று விடுதலைப் போராட்ட வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் இந்திய ராணுவத்தினரின் வீரத்தையும், தியாகத்தையும் பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
16 DEC 2021 9:58AM by PIB Chennai
50-வது வெற்றி தினத்தன்று விடுதலைப் போராட்ட வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் துணிச்சல் மிக்க இந்திய ராணுவத்தினரின் மகத்தான வீரத்தையும், தியாகத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார். டாக்காவில் இதற்கான விழாவில் குடியரசுத் தலைவர் அவர்கள் பங்கேற்பது ஒவ்வொரு இந்தியருக்கும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
" 50-வது வெற்றி தினத்தன்று விடுதலைப் போராட்ட வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் துணிச்சல் மிக்க இந்திய ராணுவத்தினரின் மகத்தான வீரத்தையும், தியாகத்தையும் நான் நினைவுகூர்கிறேன். நாம் ஒன்றிணைந்து போராடினோம். அடக்குமுறை சக்திகளை தோற்கடித்தோம். டாக்காவில் குடியரசுத் தலைவர் அவர்கள் பங்கேற்பது ஒவ்வொரு இந்தியருக்கும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்".
***
(रिलीज़ आईडी: 1782123)
आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Kannada
,
Malayalam
,
Bengali
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati