இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாட, நாடு தழுவிய ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0: மத்திய அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

Posted On: 13 AUG 2021 3:13PM by PIB Chennai

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு தழுவிய ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0-வை மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர் திரு நிஷித் பிரமானிக் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

தில்லி மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் சுதந்திர ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த மத்திய அமைச்சர், சுதந்திர ஓட்டத்திலும் பங்கெடுத்தார். இந்த சுதந்திர ஓட்ட நிகழ்ச்சி போர்ட் பிளேர் செல்லுலார் சிறை, லகால்ஸ்பிதியில் உள்ள காஜா போஸ்ட், மும்பை கேட்வே ஆப் இந்தியா, பஞ்சாப்பில் உள்ள அட்டாரி எல்லை ஆகிய முக்கிய இடங்கள் உட்பட 75 இடங்களில் நடந்தது. 

நாடு முழுவதும் முக்கியமான இடங்களில் நடந்த சுதந்திர ஓட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் கலந்துரையாடிய  மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கூறுகையில், ‘‘ சுதந்திரத்தின் 75வது ஆண்டை இந்தியா கொண்டாடுகையில், அதன் ஒரு பகுதியாக ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்ட பிரச்சாரம் நடத்தப்படுகிறது’’ என்றார்.   இந்த சுதந்திர ஓட்ட நிகழ்ச்சி, நாட்டுக்காக சுதந்திரம் பெற்ற தேசிய தலைவர்களுடன் நாட்டை இணைக்கிறது என அவர்  மேலும் கூறினார்.

அடுத்த 25 ஆண்டுகளில், நமது நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது நாம் எவ்வளவு தகுதியுடன் இருக்கிறோம் என்பதை பொருத்தது என மத்திய அமைச்சர் கூறினார்.  ‘‘ஆரோக்கியமான, தகுதியான இந்தியாவுக்கு, இளமையான மனது, உடல் மற்றும் ஆன்மா முக்கியம். தகுதியான இந்தியாவால் மட்டும் தான், வெற்றி இந்தியாவை உருவாக்க முடியும்’’ என மத்திய அமைச்சர் மேலும் கூறினார். 

நாட்டின் 75 முக்கிய இடங்களில் நடத்தப்படும் இந்த சுதந்திர ஓட்டம், நாட்டின் 750 மாவட்டங்களில் 75 கிராமங்களில் நடத்தப்படும். இதன் மூலம் உடல் தகுதி குறித்த பிரச்சாரம் ஊக்குவிக்கப்படும் என மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் நிஷித் பிரமானிக், சுதந்திர ஓட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். புதிய இந்தியாவை, தகுதியான இந்தியாவாக மாற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவை நனவாக்குவதில், ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0 முக்கிய பங்கு வகிக்கும் என அவர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745421

*****************



(Release ID: 1745539) Visitor Counter : 307