பிரதமர் அலுவலகம்
கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்கின் திறமை மற்றும் உறுதியின் வெளிப்பாட்டிற்கு பிரதமர் பாராட்டு
Posted On:
07 AUG 2021 11:18AM by PIB Chennai
ஒலிம்பிக் போட்டியில் கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்கின் மிகச்சிறந்த ஆட்டத்தின் போது வெளிப்படுத்தப்பட்ட திறமைகள் மற்றும் உறுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“மிகச் சிறப்பாக விளையாடினீர்கள், அதிதி அசோக்! டோக்கியோ 2020 போட்டியில், பேராற்றல்மிக்க திறன் மற்றும் உறுதியை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள். குறைந்த இடைவெளியில் பதக்கத்தை இழந்துள்ளோம், ஆனால் எந்த ஒரு இந்தியரை விடவும் அதிகமாக முன்னேறி, முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள். உங்களது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”
*****************
(Release ID: 1743530)
Visitor Counter : 217
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada