பிரதமர் அலுவலகம்
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி குமார் தாஹியாவிற்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
05 AUG 2021 5:06PM by PIB Chennai
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி குமார் தாஹியாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து, குறிப்பிடத்தக்க மல்யுத்த வீரர் என்று அவரைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “ரவி குமார் தாஹியா, குறிப்பிடத்தக்க மல்யுத்த வீரர்! அவரது போராடும் ஆற்றலும், விடாமுயற்சியும் மிகச் சிறப்பாக உள்ளது. டோக்கியோ 2020 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனையால் இந்தியா மிகுந்த பெருமை கொள்கிறது”, என்று கூறியுள்ளார்.
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1742866)
வருகையாளர் எண்ணிக்கை : 317
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Malayalam
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada