பிரதமர் அலுவலகம்

நீங்கள் உங்களின் சிறந்த முயற்சியைக் கொடுத்தீர்கள், உங்கள் முயற்சி முக்கியமானது : வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியிடம் பிரதமர்

प्रविष्टि तिथि: 26 JUL 2021 9:55PM by PIB Chennai

ஒலிம்பிக்கில் வாள் வீச்சு போட்டியின் முதல் சுற்றில் வென்று, இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு முதன்முறையாக வெற்றி தேடித் தந்து, அடுத்த சுற்றில் வெளியேறிய இந்திய வாள் வீச்சு வீராங்கனை சி..பவானி தேவியின் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இந்த ஒலிம்பிக் வீராங்கனையின் உணர்ச்சிபூர்வமான ட்வீட்டுக்கு பதிலளித்து பிரதமர் ட்வீட் செய்ததாவது:

"நீங்கள் உங்கள் சிறந்த முயற்சியைக் கொடுத்தீர்கள், உங்கள் முயற்சி முக்கியமானது.

வெற்றிகளும் இழப்புகளும் வாழ்க்கையின் ஒரு பகுதி.

உங்கள் பங்களிப்புகளில் இந்தியா மிகவும் பெருமிதம் கொள்கிறது. நீங்கள் நமது குடிமக்களுக்கு உத்வேகம் அளிக்கிறீர்கள். "


(रिलीज़ आईडी: 1739344) आगंतुक पटल : 229
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada