பிரதமர் அலுவலகம்

ஜூன் 5 அன்று நடைபெற உள்ள உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற உள்ளார்

प्रविष्टि तिथि: 04 JUN 2021 7:37PM by PIB Chennai

2021 ஜூன் 5 அன்று நடைபெற உள்ள உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன.

சிறப்பான சுற்றுச்சூழலுக்காக உயிரி எரிபொருள்களின் ஊக்குவிப்புஎன்பது இந்தாண்டு நிகழ்ச்சியின் மையக்கருவாக இருக்கும்.

இந்தியாவில் எத்தனால் கலப்புக்கான எதிர்கால திட்டம் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை’-யை நிகழ்ச்சியின் போது பிரதமர் வெளியிடுவார். உலக சுற்றுச்சூழல் தினத்தை குறிக்கும் வகையில், 2021 ஏப்ரல் 1-ல் இருந்து பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனாலை கலந்து விற்குமாறு எண்ணெய் நிறுவனங்களை அறிவுறுத்தும் -20 அறிவிப்பையும், உயர்ரக எத்தனால் கலப்புகளான 12 மற்றும் 15-க்கான பிஐஎஸ் விவரக்குறிப்புகளையும் இந்திய அரசு வெளியிடுகிறது.

இந்த முயற்சிகளின் மூலம் கூடுதல் எத்தனால் வடிகட்டல் வசதிகள் நிறுவப்படுவதோடு, கலப்பு எரிபொருளை நாடு முழுவதும் கிடைக்க செய்வதற்கான கால அளவுகளும் வழங்கப்படும். இதனால் எத்தனால் உற்பத்தி செய்யும் மாநிலங்களிலும், அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் 2025-க்கு முன்பாக எத்தனால் பயன்பாடு அதிகரிக்கும்.

புனேவில் மூன்று இடங்களில் 100 மையங்களுக்கான சோதனை திட்டத்தையும் பிரதமர் துவக்கி வைக்கிறார். எத்தனால் கலந்த பெட்ரோல் மற்றும் அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு திட்டங்களை செயல்படுத்துபவர்களாக விளங்கும் விவசாயிகளின் அனுபவம் குறித்து அறிந்து கொள்வதற்காக அவர்களுடன் பிரதமர் உரையாடுவார்.

 

-----


(रिलीज़ आईडी: 1724553) आगंतुक पटल : 262
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Bengali , Assamese , English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam