பிரதமர் அலுவலகம்
ஐக்கிய நாடுகளின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் நன்றி
Posted On:
24 MAR 2021 10:30AM by PIB Chennai
ஐக்கிய நாடுகளின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். தொற்றும் தன்மை இல்லாத நோய்களினால் இளம் வயதினரிடையே ஏற்படும் உயிரிழப்பைக் குறைப்பதற்கான இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஐக்கிய நாடுகளின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பாராட்டியுள்ளது.
“தொற்றும் தன்மை இல்லாத நோய்களைத் தடுப்பதற்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குமான முன்முயற்சிகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய நாடுகளின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. அனைவரும் ஒன்றாக இணைந்து நமது புவியை ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும்”, என்று பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
********
(Release ID: 1707196)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam