பிரதமர் அலுவலகம்
கதகளி நடனக்கலைஞர், குரு செமஞ்சேரி குன்ஹிராமன் நாயர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAR 2021 4:51PM by PIB Chennai
கதகளி நடனக்கலைஞர், குரு செமஞ்சேரி குன்ஹிராமன் நாயர் மறைவுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ கதகளி நடனக்கலைஞர் , குரு செமஞ்சேரி குன்ஹிராமன் நாயர் மறைவால் வேதனையடைந்தேன். இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் மீதான அவரது ஆர்வம் பழம்பெருமை வாய்ந்தது. நமது பாரம்பரிய நடனடங்களில், திறமையானவர்களை வளர்ப்பதற்கு அவர் சிறப்பான முயற்சிகள் மேற்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி’’ என குறிப்பிட்டுள்ளார்.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1704903)
வருகையாளர் எண்ணிக்கை : 265
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam