பிரதமர் அலுவலகம்

சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் மின்னணு பதிப்பை 2021 மார்ச் 11-ஆம் தேதி பிரதமர் வெளியிடுகிறார்

Posted On: 10 MAR 2021 4:56PM by PIB Chennai

சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் மின்னணு புத்தக பதிப்பை 2021 மார்ச் 11-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10:25 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டு உரையாற்றுவார்.

சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் 5 லட்சம் பிரதிகள் விற்பனையானதைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுவாமி சித்பவானந்தா, தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள திருப்பராய்த்துறையில் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் ஆசிரமத்தின் நிறுவனர் ஆவார்.

186 புத்தகங்களையும், பல்வேறு பிரிவுகளில் இலக்கியப் படைப்புகளையும் அவர் இயற்றியுள்ளார்.

கீதை பற்றிய அவரது அறிவார்ந்த படைப்பு இந்த தலைப்பில் மிக விரிவான புத்தகங்களுள் ஒன்றாகும்.

அவரது வர்ணனையுடனான கீதையின் தமிழ் பதிப்பு கடந்த  1951-லும், அதைத்தொடர்ந்து ஆங்கில பதிப்பு 1965-லும் வெளியானது.

அவற்றின் மொழிப்பெயர்ப்பு தெலுங்கு, ஒரியா, ஜெர்மன், ஜப்பானிய  மொழிகளில் அவரது பக்தர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 *****************



(Release ID: 1703908) Visitor Counter : 154